தட்டி கேட்க போகிறாராம் கமல்: பொறுத்திருந்து பார்ப்போம்!

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் ஆத்திரம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துக் கொண்டே செல்வதும், ஆரி மற்றும் பாலாஜி இடையே தொடர்ச்சியாக மோதல் வந்து கொண்டிருக்கும் காட்சிகளையும் கடந்த இரண்டு நாட்களாக பார்த்து வருகிறோம்

பாலாஜியின் செயலை கண்டிக்கத்தக்க வகையில் இருக்கும் ஒரே நபரான கமல்ஹாசன் இன்று அவருக்கு கொஞ்சம் கண்டிப்புடன் கூடிய புத்திமதியை தெரிவிப்பார் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஒரு சில பார்வையாளர்கள் ஒருபடி மேலே போய் பாலாஜிக்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் ’சட்டப்படி நடப்பது, நியாயமாக நடப்பது, நேர்மையாக இருப்பது இதெல்லாம் சுவராசியம் அற்றது என்று நினைப்பதுதான் நியூ நார்மலாக இருக்கின்றது. என்னை பொருத்தவரை அது அப்நார்மல். மூஞ்சியில் அடித்த மாதிரி பேசுவதற்கு பெயர் ஸ்ட்ரெய்ட் பார்வர்டு கிடையாது, குரலை உயர்த்தி பேசினால் அது நியாயம் ஆகிவிடாது. அது முரட்டுத்தனம். தப்பு மேல தப்பு செய்து கொண்டிருப்பவர்களை என்ன செய்வது? தட்டிக் கேட்போம் என்று கமல்ஹாசன் கூறுகிறார்

இதேபோன்றுதான் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் அன்பு குரூப்பை தட்டி கேட்பேன் என்று கமல் கூறினார். ஆனால் அவர் மென்மையாக அறிவுரை என்ற பெயரில் டிப்ஸ் மட்டுமே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது ’தட்டிக் கேட்பேன்’ என்று கூறியதை சரியாக கமல் செய்ய வேண்டும் என்பதே அனைத்து பார்வையாளர்களின் எண்ணமாக உள்ளது

More News

வீடியோ: மக்களின் ஆதரவு ஆரிக்கு என்பதை வெளிப்படையாக பேசிய ஹவுஸ்மேட்ஸ்!

நடைபெற்று முடிந்த லக்சரி டாஸ்க்கான ப்ரீஸ் டாஸ்க்கின் போது ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர் என்பதும், அப்போது உறவினர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரே நபர் ஆரி தான்

இபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசின் சாதனைப் பட்டியல்… அனைத்துத் துறைகளிலும் முதலிடம்!!!

கொரோனா காலத்திலும் பல்வேறு சிக்கல்களை கடந்து தமிழக அரசு வெற்றிகரமான ஆட்சியை நடத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் எறும்பு? ஆய்வுக்கு பரிந்துரைக்கும் நீதிமன்றம்!!!

ஒடிசா, சடீஷ்கர் மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் பழங்காலம் தொட்டு ஒரு வகையான சிவப்பு எறும்பை உணவாக உட்கொண்டு வருகின்றனர்.

சிக்கலில் மாட்டிய ரிலையன்ஸ்… முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதமா?

முறைகேடாக நடைபெற்ற பங்கு வர்த்தகம் தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல்

30 ஆண்டுகளுக்கு பின்னர் இளையராஜாவுடன் இணையும் இயக்குனர்!

தமிழ் திரையுலகில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த 'கேளடி கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் வசந்த். அதன்பின்னர் 'நீ பாதி நான் பாதி' 'ஆசை' 'நேருக்கு நேர்