தூங்குனவங்களுக்கு ஓட்டு போடாதீங்க: பாலாவுக்கு சொல்றாரா? மக்களுக்கு சொல்றாரா கமல்?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைமுகமாக அரசியல் பேசி வந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விட்டு வைப்பாரா? கடந்த இரண்டு சீசன்களிலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அரசியல் சிக்ஸர் அடித்து வருகிறார்

அந்த வகையில் இன்றைய புரமோவிலும் அவர் போட்டியாளர் பாலாஜிக்கு சொல்வது போல் மக்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறார். பாலா இந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க்கில் சரியாக விளையாடாமல் அவ்வப்போது தூங்கி விளையாட்டை மிஸ் செய்ததால் அவரை குறிப்பிடும் வகையில் ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’, என்று கூறியதோடு, ‘நீங்கள் விழிப்புடன் இருந்தால் மாற்றங்கள் வரும். உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை உருவாக்க போகிறது என்பதை பார்க்கலாம்’ என்று கமலஹாசன் மறைமுகமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பாலாவின் தூங்கும் காட்சிகள் இருந்தாலும், அவர் உண்மையில் இதனை பாலாஜிக்குத்தான் சொல்கிறாரா அல்லது விரைவில் வரவிருக்கும் தேர்தலில் தூங்கி பொழுதை கழித்தவர்களுக்கு உங்கள் ஓட்டு வேண்டாம் என்று மக்களுக்கு சொல்கிறாரா? என்பது அந்த ஆண்டவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை

 

More News

கொரோனா அதிகரிப்பால் ஊரடங்குக்குள் செல்லும் இந்தியாவின் சில முக்கிய நகரங்கள்… பரபரப்பு தகவல்!!!

மத்தியப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

வடமாநிலங்களில் களைக்கட்டும் சாத்பூஜை… எதற்கு இந்த கொண்டாட்டம் தெரியுமா???

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை சாத்பூஜை.

உலகின் மிகப்பெரிய விருதான புக்கர் விருது அறிவிப்பு…

இலக்கியத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் புக்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது

திமுக முன்னாள் எம்.பி தற்போது பாஜகவில்!!!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கமல் பட நடிகையின் மகள் சினிமாவில் அறிமுகம்: ரசிகர்கள் வரவேற்பு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'பாபநாசம்' மற்றும் 'தூங்காவனம்' ஆகிய தமிழ் படங்களிலும் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஆஷா சரத்.