ஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா கலகலப்பாக அனைவரிடமும் பழகி வந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் உடனே தானே முன் நின்று அந்த பிரச்சனையை தீர்க்க முயல்வதும் பிக்பாஸ் வீட்டில் நாட்டாமைத்தனம் செய்து வருவதும் பார்வையாளர்களை சற்று அதிருப்தியை உள்ளாக்கியது

அதுமட்டுமின்றி சுரேஷ் உள்பட ஒரு சிலர் வெளிப்படையாகவே அர்ச்சனா டாமினேட் செய்வதாக குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் கமல் நேற்றைய நிகழ்ச்சியின் போது விருமாண்டி படத்தின் கேரக்டருடன் ஒப்பிட்டு அர்ச்சனாவின் குறையை சுட்டிக்காட்டினார்.

அர்ச்சனா பிக்பாஸ்க்கு வெளியே ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னரும் தொடர்ந்து ஆங்கரின் செய்து வருவதாக கமல் தெரிவித்தார். ஆனால் அதனை வேகமாக மறுத்த அர்ச்சனாவிடம், ’அதை நான் தவறு என்று சொல்லவில்லை என்றும் ஆனால் எல்லா விஷயத்திலும் குறிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் அதில் நீங்கள் டாமினேட் செய்வதுபோல் இருக்கிறது என்றும் அர்ச்சனாவுக்கு லேசாக ஒரு குட்டு வைத்தார்

கமல்ஹாசனின் இந்த பேச்சு அர்ச்சனாவை கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது அவரது முகத்தில் இருந்து தெரிகிறது. இனிவரும் நாட்களிலாவது அர்ச்சனா தனது நாட்டாமைத்தனத்தை கைவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

என் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன் யாரை எவிக்சன் செய்வது என்பது குறித்த போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றார்

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

உதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா? சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் மகிழ்திருமேனி பெயரும் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மகிழ்திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம்

கமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி!

பிக்பாஸ் வீட்டில் தினந்தோறும் நடக்கும் சண்டைகளில் ஒன்றாக அர்ச்சனா மற்றும் பாலாஜி சண்டையை எடுத்துக்கொள்ள முடியாது. எல்லாவற்றிலும் தானே முன்னின்று இருக்க வேண்டும்

பிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ!

இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே வித்தியாசமான போட்டியாளராக இருப்பவர் சுரேஷ் தான். பொதுவாக வயதான போட்டியாளர்கள் எனக்கென்ன என்று அமைதியாக இருப்பார்கள்