இன்றே ஒருவர் வெளியேறுகிறாரா? கமல் வைத்த டுவிஸ்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 96 நாட்கள் முடிந்து இன்று 97வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் கமலஹாசன் பேசும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவில் கமல் கூறியதாவது: என்ன செய்து விட்டார்கள் இவர்கள்? என்ன தகுதி இருக்கு இவர்களுக்கு இங்கே வர? எதன் அடிப்படையில் இவர்களுக்கு ஓட்டு போடுவார்கள்? என்ற கேள்வி பலருக்கும் இருப்பதை நான் உணர்கிறேன். அதற்கான பதிலை வீட்டுக்குள் இருப்பவர்களும் சொல்லியிருக்கின்றார்கள்

இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கின்றது. அதற்கு முன்பாக ஒருவர் வெளியேற வேண்டும். அது யார் என்பதை இன்று இரவு பார்ப்போம்’ என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். இன்று இரவு ஒருவர் வெளியேறுகிறார் என்ற கமல்ஹாசனின் இந்த கூற்றில் இருந்து இன்று ஒருவர் வெளியேற்றப்படுகிறார் என்பது உறுதியாகிறது. அப்படி என்றால் நாளையும் ஒருவர் வெளியேற்றப்படுவாரா? இந்த வாரம் இரண்டு எவிக்சனா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

முன்னதாக ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கில் சோம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி விட்டார் என்றும், மக்களின் வாக்குகளை அடிப்படையில் ஆரி சேவ் செய்யப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி விட்டார் என்றும் வெளிவந்த செய்திகளை பார்த்தோம்

More News

மீண்டும் ஒருமுறை பவரை நிரூபித்த ஆரி ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுடன் முடிந்த 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க்கில் சோம் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது 

கயிறு டாஸ்க்கில் வெற்றி பெற்றது இவர் தான்: எத்ததனை மணி நேரம் தாக்குப்பிடித்தார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கயிறு டாஸ்க் நடந்தது என்பதும் இதில் கடைசி நேரத்தில் ரம்யா மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்கு பிடித்தனர் என்பதும் இவர்களில் யார் வெற்றி பெற்றார்கள்

சுதா கொங்கரா பட நடிகரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்: வைரல் புகைப்படம்

சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான 'பாவக்கதைகள்” நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. சுதா கொங்காரா இயக்கிய 'தங்கம்', விக்னேஷ் சிவன் இயக்கிய 'லவ் பண்ண உட்றனும்',

சேலத்து பாசம்: தமிழில் அறிவிப்பு செய்து முதல்வருக்காக விமானம் ஓட்டிய கேப்டன் கோபிநாத்!

தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வந்து இருந்தும் தமிழக முதல்வருக்காக விமானம் ஓட்ட வந்த கேப்டன் கோபிநாத் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? முக்கிய அறிக்கை இன்று தாக்கல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும்