close
Choose your channels

அனிதாவுக்கு ஆதரவு கொடுத்த கமல்: அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியா?

Saturday, October 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரோமோவில் அனிதாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தது அர்ச்சனா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்ததாக தெரிகிறது

சற்று முன் வெளியான இரண்டாவது புரோமோவில் ’மங்களகரமாக ஆரம்பிப்போம்’ என்று சுமங்கலி பிரச்சனை குறித்து கமலஹாசன் எழுப்புகிறார். அப்போது கருத்து கூறிய அர்ச்சனா ’அந்த இடத்தில் அந்தப் பிரச்சனையை எழுப்பியிருக்க வேண்டாம் என்பதுதான் எனது கருத்து. என்று கூறுகிறார். ஆனால் அனிதாவுடன் அவ்வப்போது மோதி வரும் ஷிவானியோ, ‘அனிதா பேசிய அந்த விஷயம் சரியானதுதான் என்றும், சொன்ன இடமும் சரியானதுதான்’ என்று கூறுகிறார்

இதனை அடுத்து அனிதா கூறும்போது ’இப்பொழுதும் நான் சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன். நான் கூறிய விஷயம் பலருக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகத்தான் அதை கூறினேன்’ என்று தனது பக்க நியாயத்தை கூறினார். அதற்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன் ’ஒரு கை மட்டும் ஓசை எழுப்பாது என்று கூறி தனது இரண்டு கைகளையும் தட்டி அனிதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். அனிதாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தது அர்ச்சனா மற்றும் சுரேஷ் ஆகிய இருவருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது என்பது அவர்கள் முகத்தில் இருந்தே தெரிய வருகிறது


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos