ஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்!
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அனிதா, பேச ஆரம்பித்தால் செய்தி வாசிப்பது போல் பேசி கொண்டே இருக்கின்றார் என்றும், வாயை திறந்தால் மூடவே மாட்டேங்கிறார் என்றும் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதில் நான் சொல்வதை யாருமே கேட்க மாட்டேங்குறீங்க, நான் சின்னப்பெண் இல்லை, எனக்கு கல்யாணம் ஆயிருச்சு என்று அனிதா அழவும் செய்துவிட்டார்
இந்த நிலையில் அனிதாவின் இந்த இடைவிடாத பேச்சை கலாய்க்கும் வகையில் ஸ்பேஸே இல்லாம பேசுறிங்க என்று கமல் கலாய்க்க, ‘நீங்க என்ன சொன்னாலும் என்னை கலாய்க்கிற மாதிரியே இருக்கு சார்’ என்று அனிதா சொல்ல, ஒருவழியா புரிஞ்சிட்டாங்கப்பா’ என்று கமல் கூறுவது இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ள சுவாரஸ்யமான காட்சிகள் ஆகும்
ஷிவானி, ஆஜித் இருவரும் பேசவே இல்லை என்றால், அர்ச்சனா, அனிதா, நிஷா ஆகியோர் பேசி கொண்டே இருக்கின்றார்கள். கமல் கலாய்த்த பின்னராவது அனிதா இனிவரும் நாட்களில் பேச்சை குறைப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்
#BiggBossTamil இல் இன்று.. #Day21 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/USJGaL6QyV
— Vijay Television (@vijaytelevision) October 25, 2020