close
Choose your channels

அர்ச்சனாவின் நம்பர் கேமுக்கு பதிலளித்த நம்மவர்!

Saturday, December 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன், அர்ச்சனாவிடம் கேட்ட கேள்வியில், ‘நீங்கள் ஒரு புது அணுகுமுறையை கண்டுபிடித்தீர்களே, என்று கேட்க அதற்கு அர்ச்சனா புரியாதவாறு முதலில் ‘என்ன சார்’ என்று கேட்க, உடனே அர்ச்சனாவுக்கு விளங்கும்படி அனிதாவை விளக்கம் கூற சொன்னார் கமல்

அனிதா உடனே ‘கேபி, சோம், அர்ச்சனா ஆகிய மூவருமே என்னுடைய பெயரை நாமினேஷனில் சொன்னார்கள்’ என்று கூறி நம்பர் கேம் என்பதை உறுதி செய்தார். உடனே அர்ச்சனா, ‘நம்பர் கேம் என்று நம்மை கூறுகின்றார்களே, இவர்களும் நம்பர் கேம் தானே விளையாடுகிறார்கள்’ என்று நான் சொல்லியிருப்பேன் சார்’ என்கிறார். அதற்கு ரியோவும் பலமாக தலையாட்டுகிறார்.

உடனே கமல், ‘நீங்கள் மட்டும் தான் நம்பர் கேம் விளையாடுகிறீர்கள் என்று நினைக்க வேண்டாம், மக்களும் நம்பர் கேம் விளையாட ஆரம்பித்தால் உங்களுடைய தனிபலம் சற்றே குறைந்துவிடும் என்று கூறுகிறார். மேலும் அவர் அர்ச்சனா பதில் கூறும்போது செய்த பாடிலேங்குவேஜ் அர்ச்சனாவை கிண்டல் செய்வது போல் இருந்தாலும், அர்ச்சனா அதை புரிந்து கொள்ளாமல் தன்னை கமல் பாராட்டுகிறார் என்று எண்ணி சிரித்தபடி இருந்தது பார்வையாளர்களுக்கு வேடிக்கையாக இருந்தது

மொத்தத்தில் இன்று வெளியேற போகும் அர்ச்சனாவுக்கு அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி தான் அனுப்புவார் கமல் என தெரிகிறது. ‘அன்பு ஜெயிக்கும் என்பது உண்மைதான், ஆனால் போலியான அன்பு ஒருநாளும் ஜெயிக்காது என்பதை அர்ச்சனா இன்று வெளியே வந்தபின்னர் புரிந்து கொள்வார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.