100 நாளை கடந்துட்டேன், இதெல்லம் எனக்கு சாதாரணம்: ஆரியின் மாஸ் வசனம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பார்வையாளர்களை கவர்ந்த ’நாடா காடா’ என்ற டாஸ்க் இன்று மீண்டும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வைக்கப்பட்டு உள்ளது என்பது இன்றைய இரண்டாவது புரமோவில் இருந்து தெரிய வருகிறது.
தற்போது எவிக்ட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் நிலையில் இந்த டாஸ்க்கில் அரசர்கள் மற்றும் அரக்கர்களாக நடித்தவர்கள் மீண்டும் இந்த டாஸ்க்கில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொர்க்கபுரி ராஜ குடும்பமும் மாயபுரி அரக்கர் குடும்பமும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க போகிறார்கள் என்றும் இதில் சிலையாக மாறும் நபரை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்றும் டாஸ்க்காக கொடுக்கப்படுகிறது.
இதனை அடுத்து சிலையாக மாறி இருக்கும் கேபியை சிரிக்க வைக்க ஒரு குழுவினர் முயற்சி செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், ‘பல சவால்களை சந்தித்து 100வது நாளை கடந்து விட்டேன், எனக்கு இதெல்லாம் சாதாரணம் என்று ஆரி ராஜ வம்சத்து உடையில் மாஸ் வசனம் பேசும் காட்சிகளும் உள்ளன.
இந்த புரமோ வீடியோவில் உள்ள காட்சிகள் ஓரளவு சுவாரசியமாக இருந்தாலும் வேறு புதியதாக டாஸ்க்கே இல்லையா? கொடுத்த டாஸ்க்கையே மீண்டும் கொடுக்க வேண்டுமா என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Day101 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/7wlqw4uN1K
— Vijay Television (@vijaytelevision) January 13, 2021