close
Choose your channels

பாலாஜிக்கு ரெட் கார்ட்: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாரா?

Sunday, November 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் நேற்று வரை வெளிவந்த செய்தியின்படி சுரேஷ் தான் குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததாகவும் அதனால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களில் சில குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த வாரம் வெளியேற்றப்பட்டது யார் என்பது குறித்த உறுதியான தகவலை இன்னும் ஒரு சில நிமிடங்களில் பார்ப்போம்

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவரான பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாகவும் அதனால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சக பெண் போட்டியாளரை மரியாதை இல்லாமல் பேசியதன் காரணமாக அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே பாலாஜி இதன் காரணமாக பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.

அப்படி என்றால் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவரும், ரெட்கார்ட் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஒருவரும் என இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்து வரும் நிலையில் இன்னும் சில நிமிடங்களில் இந்த தகவல்களின் அப்டேட்டை பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.