பிக்பாஸ் வீட்டில் இன்று எண்ட்ரியாகும் பிரபலம்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,October 31 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 27 நாட்கள் ஆகிவிட்டது என்பதும் இந்த 27 நாட்களில் ரேகா ஒருவர் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதும் அதற்கு பதிலாக அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே நுழைந்து உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த வாரம் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளர் ஒருவர் வரவேற்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாடகி சுசித்ரா பிக்பாஸில் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவிருப்பதாக தெரிகிறது

நாளை பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் பாடகி சுசித்ரா உள்ளே வரவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சுசித்ரா 25 நாட்கள் போட்டியை பார்த்துவிட்டு வருவதால் யார் யார் எப்படி என்பதை நன்றாக புரிந்து வைத்திருப்பார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய ஒருசில போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் சுசித்ராவின் வரவு நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

படமெடுக்கும் பாம்பு கூட கல்யாணம்… கற்பனையை மிஞ்சும் உண்மை சம்பவம்!!!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனும் பழமொழி ஒன்று இருக்கிறது. ஆனால் தாய்லாந்து நாட்டில் உள்ள இளைஞர்

பாசம் ரொம்ப பொங்கிருச்சு, பிக்பாஸில் அரசியல் இருக்குது: கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் தற்போது தான் ஒரு சில போட்டியாளர்களுக்கு போட்டியே புரிய ஆரம்பித்துள்ளது.

ரூ.5,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் நிறுவனம்… தமிழக அரசு ஒப்புதல்!!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த புதன்கிழமை அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளியிட்டு இருந்தார்.

சொத்தை காரணத்திற்காக மெர்சிடிஸ்-பென்ஸ் காரை கொளுத்திய இளைஞர்… வைரலாகும் வீடியோ!!!

ரஷ்யாவில் யூடியூப் சேனலை இயக்கி வருபவர் மைக்கேல் லிட்வின். இவர் ரஷ்யாவில் பிரபலமான இளைஞராக அறியப்படுகிறார்.

வானத்தில் ஒய்யாரமாக பறக்கும் கார் … அசத்தும் புது கண்டுபிடிப்பு!!!

சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கார் வெறுமனே 3 நிமிடத்தில் வானத்தில் பறக்கக்கூடிய ஏர் விமானமாக மாறமுடியும்.