close
Choose your channels

தீர்ந்தது குழப்பம்: எவிக்ட் ஆனது இவர்தான்!

Sunday, November 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதாக நேற்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்த நிலையில், இன்று காலை திடீரென வெளியேற்றப்பட்ட நபரில் ஒரு சில குழப்பங்கள் இருப்பதாகவும் இது குறித்து தகவல்களை சேகரித்து வருவதாகவும் சற்று முன்னர் கூறி வந்தோம்

இந்த நிலையில் தற்போது வந்துள்ள உறுதிசெய்யப்பட்ட தகவலின்படி சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வாரம் எவிக்ட் ஆகிவிட்டார் என்பது தெரிகிறது. இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறி விட்டார் என்ற தகவல் நிச்சயம் அவரது ஆர்மியினர்களுக்கு வருத்தத்திற்குரிய செய்தியாகும்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் மிக அருமையாக விளையாடிக்கொண்டிருந்த சுரேஷ் சக்கரவர்த்தி, கிட்டத்தட்ட இறுதிவரை நீடிப்பார் என்று நினைத்த நிலையில் மிகக்குறுகிய காலத்திலேயே பிக்பாஸ் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது உண்மையில் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியாகத்தான் உள்ளது

ஆனால் அதே நேரத்தில் பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை என்பதும் அடுத்தடுத்த புரமோ வீடியோக்கள் மற்றும் பிக்பாஸ் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களில் இருந்து இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை விரைவில் பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.