பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் விஜய் பட நடிகை: 3வது வைல்கார்டா?

  • IndiaGlitz, [Wednesday,November 04 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் ரேகா, வேல்முருகன் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட்கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளனர். இதனை அடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 பேர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மூன்றாவது வைல்கார்ட் போட்டியாளராக விஜய் பட நடிகை ஒருவர் செல்ல இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’பிகில்’ படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்த இந்திரஜா என்பவர் தான் மூன்றாவது வைல்கார்ட் போட்டியாளர் என்று கூறப்படுகிறது. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சனம்ஷெட்டி - பாலாஜி, ஆரி-அர்ச்சனா, என பல்வேறு பிரச்சினைகளும், இதுவரை இல்லாத குருப்பிஸம், ஃபேவரிஸம் போன்ற தந்திரங்களை பயன்படுத்தி வரும் போட்டியாளர்களும் உள்ள இந்த சீசனில் இந்திரஜா இந்த வீட்டில் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தமிழக முதல்வரிடம் முக்கிய வேண்டுகோள் வைத்த கார்த்திக் சுப்புராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் முக்கிய வேண்டுகோள்

'ஈஸ்வரன்' படப்பிடிப்பில் சாகஸம்; சிம்பு மீது புகார்!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிவரும் 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பிரபல எடிட்டர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் என்பவர் திடீரென காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்-இயக்குனர்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்

கணவருக்கு தெரிந்த கள்ளக்காதல்: தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி!

எதிர்வீட்டு இளைஞருடன் கள்ளக்காதலில் ஒரு பெண் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த கள்ளக்காதல் அவருடைய கணவருக்கு தெரிந்துவிட்டதை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட