close
Choose your channels

உள்ளே வந்தார் அபிஷேக்: போட்டியாளர்களின் ரியாக்சன் என்ன தெரியுமா?

Friday, November 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நபராக வீட்டை விட்டு வெளியே போன அபிஷேக் மீண்டும் உள்ளே வரப் போவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் அபிஷேக் உள்ளே வரும் காட்சி அட்டகாசமாக அமைக்கப்பட்டுள்ளது. தாயம் போட போட ஒரு பெட்டியிலிருந்து இமான் அண்ணாச்சி பொருள்களை எடுத்து போட்டியாளர்கள் மத்தியில் காண்பிக்கிறார்.

அவ்வாறு ஒரு பெட்டியை திறக்கும் போது அதிலிருந்து அபிஷேக் வெளியே வருகிறார். அபிஷேக்கை பார்த்து சக போட்டியாளர்கள் துள்ளிக்குதிக்கும் காட்சிகளை பார்க்கும்போது அவர் மீண்டும் உள்ளே வந்தது அனைத்து போட்டியாளர்களும் சந்தோசம் என்றே தெரியவருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீஎண்ட்ரியான அபிஷேக்கால் குழப்பங்கள் அதிகரிக்குமா? அல்லது சுவராசியம் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.