close
Choose your channels

பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் ரிவ்யூ செய்யும் அபிஷேக்: இவர் திருந்தவே மாட்டாரா?

Thursday, October 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக ராஜா, யூடியூப் சினிமா விமர்சகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவர் தனது விமர்சன வேலையை மறந்து விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல கண்டெண்ட் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பின்னரும் திரும்பவும் அவர் ரிவ்யூ செய்து கொண்டிருப்பது பார்வையாளர்களுக்கு சற்று எரிச்சலை தருகிறது.

ஏற்கனவே அவர் சிபி சக்கரவர்த்தி, நிரூப் உள்பட ஒரு சிலரை முகத்தை பார்த்து அவர்களுடைய கேரக்டரை சொல்கிறேன் என்று ரிவ்யூ செய்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஐக்கி பெர்ரி பற்றி ரிவ்யூ செய்து கொண்டிருந்தார்.

ஐக்கியை ஒரு திரைப்படமாக உருவகப்படுத்தி கொண்டு இந்த படத்தை பலமுறை பார்த்தால்தான் டைட்டிலே புரியும் என்றும், ஆனால் அவர் பாடும் ராப் பாடல்கள் எல்லாமே மக்களை கவரும் என்றும், அவருடைய நடை உடை பாவனை எல்லாமே ஒரு ஒரு பொம்மை மாதிரி இருக்கிறது என்றும், ஆனால் அந்த பொம்மைக்குள் ஒரு உயிர் ஒன்று ஒளிந்து கொண்டிருக்கிறது என்றும், அப்படிப்பட்ட ஆள் தான் ஐக்கி என்றும் கூறி மொக்கை போட்டார்.

அதற்கும் சக போட்டியாளர்கள் சிரித்தது தான் ஆச்சரியம். ஆனால் ஒருகட்டத்தில் அபிஷேக் ராஜாவின் மொக்கையை தாங்க முடியாமல் வருண் அந்த இடத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.