என் கண்ணு முன்னாடி வராதே, கடுப்பாயிடுவேன்: சிபி, ராஜூவுக்கு எச்சரிக்கை விடும் அக்சரா!

என் கண்ணு முன்னாடி வராதே, கடுப்பாயிருவேன் என்று ராஜு மற்றும் சிபி ஆகிய இருவரையும் நோக்கி ஆத்திரமாக அக்ஷரா கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் தற்போது ’கனா காணும் காலங்கள்’ என்ற பள்ளிக்கூட டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் சிபிக்கு ஸ்ட்ரிக்ட்டான வார்டன் கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிபி தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரது செயல்பாடு பிரியங்கா, அக்ஷரா உள்பட ஒரு சிலருக்கு ஆத்திரத்தை உண்டாக்கி உள்ளது.

குறிப்பாக இன்றைய முதல் புரமோவில் சிபியும் அக்ஷராவும் கடுமையாக மோதிக் கொண்ட நிலையில் இரண்டாவது புரமோவில் சிபிக்கு ஆதரவாக பேச வந்த ராஜுவுடன் அக்‌ஷரா மோதும் காட்சிகள் இன்றைய 2-வது புரமோவில் உள்ளன.

நீ பேசாத என்கூட, என் கண்ணு முன்னாடி நிக்காத, கடுப்பாயிருவேன் என்று சிபி மற்றும் ராஜூவை நோக்கி எச்சரிக்கும் விதமாக அக்ஷரா கோபத்துடன் கூறுவது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் முரண்பாடாக உள்ளது. ஒரு ஜாலியான டாஸ்க்கை டாஸ்க்காக பார்க்காமல் அக்ஷரா இந்த அளவுக்கு கோபப்பட வேண்டியதில்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் அக்ஷராவுக்கு வாக்குகள் மிக அதிகமாக குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது சூர்யா பட இயக்குனரா? ஆச்சரியமான தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை சூர்யா பட இயக்குனர் இயக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கார் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்… மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ்  11 ஆவது சீசன்

'ஆர்.ஆர்.ஆர்.' பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடிய தமிழ் பிக்பாஸ் பிரபலம்!

சமீபத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற திரைப்படத்தின் பாடலுக்கு தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் செம டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

கடலில் மீனாக இருந்தவள் நான்: விஜய் பட நாயகி

விஜய் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பிரபல நடிகை கடலில் நீந்தும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.