close
Choose your channels

ஹீரோவாகிவிட்டார் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 பிரபலம்: ஜோடி யார் தெரியுமா?

Friday, July 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் திரையுலகில் ஜொலித்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக ஹரிஷ் கல்யாண், ஆரி உள்பட சிலர் தற்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிரூப் தற்போது ஹீரோவாகி உள்ளார். அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி 105 நாட்கள் நிரூப் தாக்குப்பிடித்தார் என்பதும் அவர் இந்த நிகழ்ச்சியின் 4வது ரன்னர் அப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிரூப் நடிக்கும் திரைப்படத்திற்கு ’ரெயின்போ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை திரைக்கதை வசனத்தை ஹோசிமின் என்பவர் எழுத விவேக் பட்டாபிராம் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நிரூப் ஜோடியாக சிம்ரன் ராஜ் என்பவர் நடிக்க உள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் மனோபாலா, மைம்கோபி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோவாகியுள்ள நிரூப்புக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.