இனிமே சத்தியமா உங்ககிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டேன்: அண்ணாச்சியை சூடேற்றிய பிரியங்கா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கேப்டன் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் கேப்டன் டாஸ்க்கில் பிரியங்கா, சிபி, ஐக்கி பெர்ரி மற்றும் நிரூப் ஆகிய நால்வரும் போட்டியிடுகின்றனர் என்பதும் இவர்களில் யார் கேப்டனாக வரக்கூடாது என்பதை முடிவு செய்து அவர்களுக்கு எதிரே இருக்கும் பெளலில் தண்ணீரை ஊற்ற வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவிக்கின்றார்.

முதல் புரமோவில் நிரூப் கேப்டனாக வரக்கூடாது என ஒரு சிலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோவில், ‘நான் உங்களுடைய கைப்பாவை ஆகிவிடுவேன், நீங்கள் என்னை கண்ட்ரோல் பண்ணுவீர்கள் என்று பிரியங்கா கூறுகிறார். இது போல் நீங்களும் நினைக்கவில்லை, நானும் நினைக்கவில்லை என்று இமான் அண்ணாச்சியை நிரூப் பிரெய்ன் வாஷ் செய்ய உடனே, அவரது கூற்றை ஏற்றுக் கொண்ட இமான் அண்ணாச்சி உடனே பிரியங்கா கேப்டனாக வரக்கூடாது என்று தண்ணீர் ஊற்றுகிறார்.

இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறிய பிரியங்கா, ‘நன்றி அண்ணாச்சி! உங்கள் வார்த்தைகளை நீங்கள் எப்படி மாற்றுவீர்கள் என்பது எனக்கு தெரிந்து விட்டது. இனிமேல் சத்தியமா உங்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டேன் என்று சூடேற்றும் வகையில் பிரியங்கா கூறுகிறார். இன்றைய நிகழ்ச்சியில் இருந்து இனிவரும் நாட்களில் பிரியங்கா மற்றும் இமான் அண்ணாச்சி இடையே சூடு பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பொது இடத்தில் கொழுந்தியாளுக்கு முத்தம் கொடுத்த போலீஸ் சஸ்பெண்ட்!

பொது இடத்தில் கொழுந்தியாளுக்கு முத்தம் கொடுத்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பாமக நிர்வாகி: இத்தனை கோடி நஷ்ட ஈடா?

நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு: பாமக பிரமுகர் சர்ச்சை அறிவிப்பு!

நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பாமக பிரமுகர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா… ஐசிசி கோப்பை வென்று சாதனை!

இந்த ஆண்டு ஐசிசி தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

டி20-யில் வெளுத்து கட்டிய டேவிட் வார்னர்… கண்ணீரில் தத்தளிக்கும் SRH!

ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டியின் முதல்பாதியில் சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிப்பெற்றது.