யார் அந்த கருப்பு ஆடு? ஆவேசத்தில் கத்திய சஞ்சீவ்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ’அரசியல் மாநாடு’ டாஸ்க் நடைபெற்றது என்பதும் மூன்று அரசியல் கட்சிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியிலும் நான்கு உறுப்பினர்கள் விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றுடன் டாஸ்க் நிறைவு பெறும் நிலையில் எந்த கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்ற வாக்கெடுப்பு நடைபெற்றது.

இமான் அண்ணாச்சியின் நியாயத்தைப் பேசும் மக்கள் கட்சியும், சிபியின் மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சி தனித்து போட்டியிட்டது. வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையில் இமான் அண்ணாச்சி மற்றும் சிபி இணைந்த கூட்டணிக்கு 7 வாக்குகளும் பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சிக்கு 5 வாக்குகளும் கிடைத்தது.

இதனை அனைத்து இமான் அண்ணாச்சியின் வெற்றியை சக போட்டியாளர்கள் கொண்டாடினாலும் இரண்டு கட்சிகள் கூட்டணி சேர்ந்திருப்பதால் அந்த கூட்டணிக்கு 8 ஓட்டுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 7 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்ததை அடுத்து இமான் அண்ணாச்சி ’யார் அந்த கருப்பு ஆடு’ என்று கேட்கிறார். அதேபோல் சஞ்சீவியும் ‘எவன்டா அவன்? என்று கத்தும் காட்சிகளோடு இன்றைய புரொமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் யாரோ ஒருவர் பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சிக்கு மாற்றி ஓட்டு போட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த கருப்பு ஆடு யார்? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

வைகைப்புயல் வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

 தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் வைகை புயல் வடிவேலு என்பதும், கடந்த சில ஆண்டுகளாக அவர் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்பதும் தெரிந்ததே.

கிரிக்கெட் கிரவுண்டில் கபடி ஆடிய டேவிட் வார்னர்… ரசிகர்களே வியக்கும் வீடியோ!

முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் காபாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட்

ஏ.ஆர்.ரஹ்மான் இல்ல திருமணம்: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மறக்க முடியாத பரிசு!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் புதுமண தம்பதிகளுக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை அளித்துள்ளார்

அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' அட்டகாசமான வீடியோ!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம்

நீண்ட நாள் நண்பருக்காக சரத்குமார் படத்தை இயக்கிய அனிருத்!

தனது நீண்ட நாள் நண்பர் ஒருவர் சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் படத்தை இசையமைப்பாளர் அனிருத் அந்த படத்தை இயக்கிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.