நம்மல ஒதுக்குறாங்கன்னா, செதுக்குறாங்கன்னு அர்த்தம்: இசைவாணி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் ஒரு சிலர் தவிர கிட்டத்தட்ட அனைவருமே ஏழ்மை நிலையிலிருந்து பல கஷ்டங்களை அனுபவித்து, பல போராட்டங்களை சந்தித்து, பல சவால்களை சந்தித்து ஓரளவுக்கு முன்னேறியவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இதனால் ஒவ்வொருவரிடம் பல கண்டெண்ட்கள் உள்ளன என்பது அவருடைய பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

அந்த வகையில் இன்றைய இரண்டாவது புரமோவில் இசைவாணி மற்றும் ஸ்ருதி இடையே நடைபெற்ற உரையாடலில், ‘நான் அழவே கூடாது என்று நினைத்தேன், ஆனால் என் அழுகை என்னை வலிமையாக்கியது, அதனால் நான் அழுவேன் என்று கூறுகிறார்.

அப்போது இசைவாணி ’நம்மை ஒரு சிலர் ஒதுக்குகிறார்கள் என்றால் அவர்கள் நம்மை செதுக்குகிறார்கள் என்று அர்த்தம் என்று அவரது கருத்தை ஆமோதிக்கின்றார். மேலும் நம்மை நிறைய இடத்தில் நம்முடைய கலரை வைத்தே நம்மை ஒதுக்குவார்கள் என்று ஸ்ருதி கூறியபோது, இசைவாணி ’எதை ஒருவர் ஒதுக்குகிறார்களோ அதுதான் தனியாக தெரியும் என்று கூறினார்.

நம்மை கலரை வைத்து பலர் கேலியும் கிண்டலும் செய்தார்கள் ஆனால் இந்த வீட்டில் நான் இங்கே இருப்பதற்கு காரணம் அந்த கலர் தான் என்று ஸ்ருதி ஆணித்தரமாக கூறுகிறார். மேலும் எனக்கு இந்த கஷ்டமெல்லாம் வரவில்லை என்றால் இந்த வீட்டிற்கு நான் வந்திருக்க மாட்டேன் என்றும் அவர் கூறுவது ஏற்று கொள்ளக்கூடிய உண்மையாகவே உள்ளது.

More News

விவசாயிகள் படுகொலை… சொந்த கட்சிக்கு எதிராக நடிகை குஷ்பு காட்டம்!

உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும்,

பெருசு, ஐ டிராப்ஸ் போட்டியா? பிக்பாஸை வச்சு செய்யும் ப்ரியங்கா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பெரும்பாலானோர் புதியவர்களாக இருந்தாலும் பிரியங்கா மற்றும் ராஜூ ஜெயமோகன் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கிய வருகின்றனர்

சூர்யாவின் 'ஜெய்பீம்' சென்சார் மற்றும் ரன்னிங் தகவல்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக

தனுஷின் மாஸ் பாடல் வரிகளில் ஹன்சிகாவின் அடுத்த பட டைட்டில்!

தனுஷ் நடித்த படத்தில் இடம்பெற்ற மாஸ் பாடல் ஒன்றின் வரிகளையே ஹன்சிகா நடிக்கும் அடுத்த படத்துக்கு வைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இமான் அண்ணாச்சியால் ஆரம்பித்த முதல் சண்டை: அனல்பறக்கும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களிலும் போட்டியாளர்கள் ஒரு சில நாட்கள் மட்டும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதும் அதன் பின் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும், அணி அணியாகப் பிரிந்து