இசைவாணிக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டதா? வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவராகிய இசைவாணி திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டதாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய இசைவாணி தனது வாழ்க்கை கதையைக் கூறும் போது அவர் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள், நல்ல உடை கூட இல்லாமல் சிரமப்பட்டது, சாப்பாடு கூட இல்லாமல் இருந்தது, வீடு வீடாக மாறி சென்றது போன்றவற்றை கண்ணீருடன் கூறினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்ற செய்தியை அவர் தனது கதையில் கூறாமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கானா பாடகர் ஸ்ரீகாந்த் தேவா என்பவருக்கும் இசைவானிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி அதன் பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டி உள்பட பலர் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை மனம் திறந்து கூறிய நிலையில் இசைவாணி தன்னுடைய திருமணத்தையும் விவாகரத்தையும் மறைத்தது ஏன் என்ற கேள்வியை தற்போது நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.