close
Choose your channels

ஸ்ட்ரெயிட்டா கமல் சார்கிட்டே பேசப்போறேன்: இமானை குறிவைக்கும் இசைவாணி!

Thursday, October 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் வழக்கம்போல் போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். அதன் பின்னர் தற்போது அனைத்து சீசன்களில் உள்ளது போலவே ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் ஒருவர் குறித்து இன்னொருவரிடம் புறங்கூறி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் இமான் அண்ணாச்சி குறித்து இசைவாணி குற்றம் சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் ’அவர் ஒருத்தர்தான் எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார் என்று இசைவாணி கூற, அதற்கு யார் என்று ராஜூ கேட்க, அண்ணாச்சி தான் என்று இசைவாணி கூறுகிறார். அதெல்லாம் அண்ணாச்சி நல்லா மேட்ச் பண்ணுவாரே என்று ராஜூ கூறியபோது ’நல்லா பண்றாரு’ என்று சலிப்புடன் கூறிய இசைவாணி, ‘ஓகே கேக்கலைன்னா இனிமேல் ஸ்ட்ரெயிட்டா கமல் சார் கிட்ட பேச போறேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து டைனிங் டேபிளில் அனைத்து போட்டியாளர்களும் இருக்கும்போது இசைவாணியை ஒருசில போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். முதலில் தாமரை இசைவாணி குறித்து கூறியதும், ‘என்னக்கா இப்படி பேசுகிறீர்கள் என்று இசைவாணி புலம்புகிறார். அதனை அடுத்து மதுமிதாவும் இசைவாணி குறித்து கூறுகிறார். இதெல்லாம் பார்க்கும்போது இந்த வாரம் இசைவாணி கமல் சாரிடம் ஒரு பஞ்சாயத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.