close
Choose your channels

பிரியங்காவுக்கு கமல்ஹாசன் கேள்வி: நெட்டிசன்களின் குறும்படம் வேலை செய்யுது போல!

Saturday, October 23, 2021 • தமிழ் Comments

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்ஷரா கேமரா முன் எழுதி காண்பித்துவிட்டு அதை டிஸ்போஸ் செய்துவிடுவதாக பிரியங்கா குற்றம்சாட்டினார் என்பதையும் அதே போல் பிரியங்காவும் நிரூப் கையில் எழுதிக் காட்டியதையும் குறும்படமாக நெட்டிசன்கள் போட்டு காட்டியதையும் ஏற்கனவே பார்த்தோம்.

நெட்டிசன்கள் போட்ட குறும்படத்தை கமலஹாசனும் போடுவாரா என்ற கேள்வி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் குறும்படம் போடுகிறாரா இல்லையா என்பது தெரியாது, ஆனால் நெட்டிசன்களின் குறும்படம் சிறப்பாக வேலை செய்துள்ளது என்பது அவர் பிரியங்காவிடம் இதுகுறித்து கேள்வியை எழுப்பியுள்ளதில் இருந்து தெரிய வருகிறது.

அக்சரா எழுதிக்காட்டியதாக குற்றம் சாட்டிய நீங்கள், நிரூப் கையில் எழுதிக் காட்டியதை நாங்கள் பார்த்தோம், விமர்சகர்கள் முதலில் நாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரியங்காவுக்கு அறிவுரை கூறியதோடு, அக்ஷராவுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் விதிகள் பொருந்தும் என்று கூறினார்.

கமல்ஹாசன் சொன்னதை கேட்டவுடன் பிரியங்காவின் முகம் மாறியதை இன்றைய 2-வது புரமோவில் பார்க்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz