close
Choose your channels

தாமரையை பேசவிடாமல் திக்குமுக்காட வைத்த கமல்: பிரியங்கா முகத்தில் குஷி!

Saturday, December 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கிட்டதட்ட அனைத்து நாட்களிலும் தாமரை மற்றும் பிரியங்கா இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும், டாஸ்க்கின்போது மட்டுமின்றி சாதாரண நேரத்திலும் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதன் காட்சியை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய கமல் நிகழ்ச்சியின் ப்ரியங்கா-தாமரை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியான புரமோவில் கமல் தாமரையை பேசவிடாமல் திக்குமுக்காட வைக்கும் வகையில் நாடகம் குறித்தும் அவர் பிரியங்காவிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் மூச்சுவிடாமல் பேசி வருகிறார்.

இதனால் தாமரை முகத்தில் அதிர்ச்சி தென்படுகிறது. தாமரை முகத்தில் அதிர்ச்சி தெரியத் தெரிய பிரியங்காவின் முகத்தில் குஷி அதிகமாகிக் கொண்டே வரும் காட்சிகளும் இன்றைய புரொமோவில் உள்ளது. மொத்தத்தில் இன்று தாமரை தாக்கப்பட்டதாகவே தெரிகிறது. ஆனால் இன்றைய முழு நிகழ்ச்சியையும் பார்த்தால்தான் தாமரை மட்டுமின்றி பிரியங்காவும் தாக்கப்படுவாரா? என்பது தெரியவரும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.