close
Choose your channels

இந்த வாரம் டார்கெட் செய்யப்படும் இரண்டு பெண் போட்டியாளர்கள்!

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று அந்த வாரம் வெளியேற்றப்பட இருக்கும் போட்டியாளர் குறித்த நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும், திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும் வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி நேற்று முதல் நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து நாடியா சாங் வெளியேற்றப்பட்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த நிலையில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் தொடங்கியது

கடந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்த ஒரே போட்டியாளரான பாவனி ரெட்டி இந்த வாரம் பல போட்டியாளர்களால் குறி வைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த வாரம் எலிமினேஷனில் இருந்து நூலிழையில் தப்பிய சின்னப்பொண்ணு அம்மாவையும் பலர் நாமினேட் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பாவனி ரெட்டி மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய இருவரையும் சக போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos