close
Choose your channels

நல்லவேளை இந்த புரமோவில் அபிஷேக் இல்லை: ஆனால் பாவனி ரெட்டி..

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் மூன்று புரமோக்களிலும் அபிஷேக் தான் வருகிறார் என்பதும் அதேபோல் ஒரு மணி நேர நிகழ்ச்சியிலும் பெரும்பாலும் அவர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்

அபிஷேக்கின் முகத்தை அடிக்கடி பார்ப்பது ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை தந்து கொண்டிருக்கும் நிலையில் நல்லவேளையாக இன்று வெளியான மூன்றாவது புரமோவில் அபிஷேக் வரவில்லை. ஆனால் அபிஷேக்கின் வேலையை பாவனி ரெட்டி செய்கிறார்.

பாவனி ரெட்டி, அபினய் இடம், ‘நீங்கள்தான் வருண் என்னைப்பற்றி தப்பு தப்பா பேசியதாக சொன்னீர்கள் என்று கூறிய பாவனி, ‘இவர்தான் உன்னை பற்றி தப்பாக பேசினார் என்று வருணிடமும் நேரடியாக கூறுகிறார். மேலும் நான் முன்னாடி தான் எப்போதும் பேசுவேன் என்றும் மூஞ்சிக்கு பின்னாடி எனக்கு பேச தெரியாது என்றும் பாவனி கூறுகிறார். இதற்கு விளக்கம் அளிக்க அபினய் முன்வந்த போதிலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டு கூறுகிறார்.

இந்த நிலையில் இந்த வாக்குவாதத்தில் பின்னணியில் மதுமிதாவிடம் அபிஷேக் வாதம் செய்யும் காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.