close
Choose your channels

இந்த சீசனின் விஷ பாட்டில் அவார்டு இவருக்கா? 

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் குணங்களுக்கு ஏற்ப ஒரு பட்டம் கொடுக்கப்படும் என்பதும் குறிப்பாக விஷ பாட்டில் பட்டம் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் விஷ பாட்டில் பட்டம் ஜனனிக்கு கிடைத்த நிலையில் இந்த சீசனில் விஷ பாட்டில் பட்டம் அக்சராவுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அக்சரா தனக்கு கிடைத்த பட்டம் குறித்து கூறுகையில், யாரையும் ஏற்றிவிட்டு பார்ப்பதோ அல்லது கொளுத்தி போடுவதோ என்னுடைய குணமல்ல என்றும், பிடிக்கவில்லை என்றால் தூரமாக இருப்பேன் என்று விளக்கம் கொடுத்து சொல்கிறார்.

இதனை அடுத்து இசைவாணிக்கு தொட்டாசினிங்கி என்ற பட்டம் கொடுக்கப்படுகிறது. மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு பேசுபவர் நான் கிடையாது என்றும், எதுவாக இருந்தாலும் ஓப்பனாக பேசுவேன் என்று சொடக்கு போட்டு கொண்டு செல்கிறார்.



இதனையடுத்து சிம்பிளி வேஸ்ட் என்ற பட்டம் நிரூப்புக்கு கொடுக்கப்படுகிறது. இந்த பட்டம் கொடுக்கும் போது பாவனிக்கும் நிரூப்புக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது என்பதும் ’உங்கள மாதிரி கெட்ட மூளை எனக்கு கிடையாது’ என்று நிரூப்புக்கு பாவனி பதிலடி கொடுப்பதும் இன்றைய புரமோவில் உள்ளது. மொத்தத்தில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கும் பட்டம் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.