குறும்படம் போடுங்க பிக்பாஸ்: ப்ரியங்காவால் ஆவேசமான அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பான போட்டியாளரான பிரியங்காவால் ஆவேசமான அபிஷேக் ராஜா குறும்படம் போடுங்க பிக்பாஸ் என தெரிவித்தது இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் வெளிவந்துள்ளது.

சற்று முன் வெளியான மூன்றாவது புரமோ வீடியோவில் பிரியங்காவை அழைத்து நமீதா ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார். காபி டீ குடித்துவிட்டு எச்சி கிளாஸ ஆங்காங்கே வைத்து விட்டு போகிறார்கள் என்றும், நான் சொன்னால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்.

இதனை அடுத்து அறிவிக்கப்படாத கேப்டனான பிரியங்கா அனைவர் முன்னிலையிலும் ’டீ காபி குடித்ததற்கு அப்புறம் குடித்த கிளாஸை சிங்க் தொட்டியில் வைக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனை அடுத்து நமீதா ஆவேசமாக ’வெசல் வாஷிங் டீமில் உள்ளவர்கள் சிங்க் உள் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களை மட்டும் கழுவுங்கள், வெளியே வைக்கும் பாத்திரங்களை அப்படியே வைத்திருங்கள் என்று கூறுகிறார்.

அப்போது அபிஷேக் திடீரென தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, ‘இப்ப ஏன் நீ சி.எம். ஆகணுன்னு என்று சொன்னேன் என்பது புரியுதா என்று கூற உடனே பிரியங்கா, ‘எனக்கு தெரிஞ்சு அபிஷேக் தான் வெளியே வைத்திருப்பான், எதுக்குடா வெளியே வச்சிட்டு போற என்று கூற உடனே அபிஷேக் ஆவேசமாகி ‘குறும்படம் போடுங்க பிக் பாஸ், யார் வச்சதுன்னு பார்க்கலாம்’ என்று கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்க் உவருகிறது.

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் ஒரு கலகலப்பான சண்டை இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

More News

ராஜினாமா செய்வாரா பிக்பாஸ்: வேற லெவலில் கலாய்க்கும் ப்ரியங்கா!

அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீரியசாக நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் தமிழில் கூட கடந்த நான்கு சீசன்களாக போட்டியாளர்கள் அனைவரும் சீரியஸாக இருந்தனர்

கதறி அழுத பவானியை ஒரே நிமிடத்தில் சிரிக்க வைத்த பிரியங்கா!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா சக போட்டியாளர்களை மட்டுமின்றி பிக்பாஸஸையும் சேர்த்து கலாய்த்து வருகிறார் என்பதும் அவரது கலாய்ப்பு வேற லெவலில் உள்ளது

சிஎஸ்கே அணியில் சாம் கரனுக்குப் பதிலாக களம் இறங்கப் போவது யார்?

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் 2021 ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

அடுத்த ஐபிஎல்-இல் தல தோனி இருப்பாரா? சிஎஸ்கே நிர்வாகம் சொல்வது என்ன?

“அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சென்னை சிஎஸ்கே சார்பாக மகேந்திர சிங் தோனி தக்கவைத்துக் கொள்ளப்படுவார்“

பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் ரிவ்யூ செய்யும் அபிஷேக்: இவர் திருந்தவே மாட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக ராஜா, யூடியூப் சினிமா விமர்சகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவர் தனது விமர்சன வேலையை மறந்து விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில்