close
Choose your channels

நானும் ஜிகுஜிகுவென வருவேன்: ப்ரியங்கா மேக்கப்பும், தாமரை செல்வியின் அப்பாவித்தனமும்!

Friday, October 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரியங்கா மேக்கப் போடுவதை அப்பாவியாக தாமரைசெல்வி வேடிக்கை பார்த்த காட்சிகள் நேற்றைய எபிசோடில் சுவாரசியமாக இருந்தது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பெரும்பாலான நேரத்தை நமீதா தன்னுடைய கண்ணீர் கதையைக் கூற எடுத்துக் கொண்ட நிலையில் ஓரிரு காமெடி காட்சிகளும் அரங்கேறியது. அந்த வகையில் பிரியங்கா தனக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருப்பதை அப்பாவியாக வேடிக்கை பார்த்த தாமரைச்செல்வி வீட்டில் இருக்கிற எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டியா என்று கேட்டார்

மேலும் என்றைக்காவது அக்காவுக்கு மேக்கப் போட்டு தாரேன் என்று சொல்லி இருக்கிறாயா? என்று கேட்டபோது எனக்கும் யாருக்காவது மேக்கப் போட்டு விட வேண்டும் என்ற ஆசைதான் என்று கூறினாரே தவிர தாமரைச்செல்விக்கு மேக்கப் போடுவது பற்றி அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மேலும் கமலஹாசன் வரும் நாளன்று இதைவிட நன்றாக மேக்கப் போட்டு அழகாக இருக்கவேண்டும் என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார். அவரது மேக்கப் சாதனைகளையும் அவர் மேக்கப் போடும் முறையையும் ஆச்சரியமாக பார்த்த தாமரைச்செல்வி, ‘நானும் கமல்ஹாசன் வரும் நாளில் நாடக உடையை உடுத்திக் கொண்டு ஜிகுஜிகுவென வருவேன் என்று அப்பாவியாக கூறியது ரசிக்கும் வகையில் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.