யோவ் பிக்பாஸ் பெரிசு, நைட்டியை ஏன்யா திருடுற... பங்கமாய் கலாய்த்த ப்ரியங்கா!

  • IndiaGlitz, [Thursday,October 07 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக்பாஸ் யார் என்று யாரும் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் அந்த குரலுக்கு அனைத்து போட்டியாளர்களும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். குறிப்பாக கமல்ஹாசன் கூட பிக் பாஸ் மீது மரியாதை வைத்துள்ளார் என்பது பல நேரங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் பிக்பாஸ் என்னவோ நம்ம பக்கத்து வீட்டுப் பையன் போல, இந்த அளவுக்கு பங்கமாய் இதுவரை நடந்த 4 சீசன்களில் யாருமே கலாய்த்தது இல்லை என்ற அளவுக்கு பிக்பாஸை வெளுத்து வாங்குகிறார் பிரியங்கா

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பிரியங்கா என்பதால் அவரை எதுவும் சொல்ல முடியாது என்பதால் அவர் இஷ்டத்திற்கு புகுந்து விளையாடுகிறார். தாமரைச் செல்வியின் நைட்டியை காணவில்லை என்றவுடன், ஏன்யா பிக்பாஸ் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடத்தற, உனக்கு இந்த திருட்டு புத்தி தேவையா? நைட்டியை ஒழுங்காக கொண்டு வந்து கொடுத்துடு என்று கூறுவதும், அதனை அடுத்து ’நான் சொன்னால் பிக்பாஸ் கேட்பார் என்று எல்லாரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள், அந்தக் கெத்தை காப்பாத்து’ என்று கூறுவதும் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி நமக்கே விழுந்து விழுந்து சிரிப்பு வருகிறது.

மேலும் ’எப்ப பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வச்சேனோ, அப்பவே விஜய் டிவியில் எனக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே ஒரு சேனலில் ஆடிசன் போயிட்டு தான் வந்து இருக்கேன், ஆனால் நம்ம பசங்க ஒரு வருஷத்துக்கு எந்த சேனலுக்கும்ம் போகக்கூடாதுன்னு அக்ரிமெண்ட்ல கையெழுத்து வாங்கி விட்டார்கள் ஆனால் யூடியூப் சேனலுக்கு போலாம்ல்ல, என்று விஜய் டிவியின் பல ரகசியங்களை புட்டுபுட்டு வைத்தார் ப்ரியங்கா. பின்னர் நிகழ்ச்சி முடிஞ்சவுடனே தானே பேமெண்ட் தருவாங்க என்று கூறியவுடன், உடனே பிக்பாஸ்க்கு அவர் மணி அடித்தது கலாய்ப்பின் உச்சம். மொத்தத்தில் பிரியங்கா நேற்றைய நிகழ்ச்சியில் ஹீரோயின் ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
 

More News

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது

தேவாலயங்களில் 3.50 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை… பகீர் அறிக்கை!

பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கடந்த 70 ஆண்டுகளாக 3.30 லட்சம் சிறுவர்,

ரம்பை, ஊர்வசியை மிஞ்சிய மாளவிகா மோகனன்… ரசிகர்களே ஷாக்காக்கும் வைரல் பிக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “பேட்ட“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்

ஸ்மார்ட் போனால் வரும் கொடிய ஆபத்து... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா நேரத்தில் மனித வாழ்க்கை முறை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்விமுறையே மாறிப்போய் இருக்கிறது.

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக விண்வெளியில் ஷுட்டிங் நடத்தும் படக்குழு!

ரஷ்யாவைச் சேர்ந்த இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ என்பவர் தனது The Challenge எனும் புது திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விண்வெளிக்கு சென்றுள்ளார்.