ராஜூ ஜெயமோகன் கூறிய கதை: அலறியடித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று 18 போட்டியாளர்களை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இன்று 2-வது நாளில் போட்டியாளர்கள் சுவராசியமாக கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு ஜெயமோகனிடம் தாமரை செல்வி ஒரு கதை சொல்லுமாறு கேட்க, ராஜூ ஜெயமோகன் ஒரு கதை கூறுகிறார். அந்த கதையை கேட்டு சக போட்டியாளர்கள் அலறி அடித்துக் கொண்டும் ஒரு சிலர் விழுந்து விழுந்து சிரித்த காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் வெளியாகி உள்ளது.

ராஜூ ஜெயமோகன் கூறிய கதையில் ’ஊர் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் வீட்டை தட்டி உங்க அம்மா கையில் ஒரு மோதிரம் இருந்ததே, அது எங்கே? என கேட்டதாகவும், அந்த மோதிரத்தை நாங்கள் எடுக்கவில்லை என்று கூறியதாகவும், அதன் பின்னர் உள்ளே சென்று கையை உடைத்து மோதிரத்தை எடுத்து பாடியை போட்டு மூடி விட்டு விட்டதாகவும் கூறியவுடன் அருகில் இருந்து தாமரை செல்வி உள்பட அனைவரும் சிரித்து கொண்டே அலறினர்.

மொத்தத்தில் இன்று இரண்டாவது நாள் என்பதால் ஜாலியாக செல்கிறது என்பதும், இதே ஜாலி தொடர்ந்து நீட்டிக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.