close
Choose your channels

இனிமேல் கிசுகிசு பேச முடியாது: பிக்பாஸ் புதிய புரமோ வீடியோ

Friday, September 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிமைப்படுத்தும் காலம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே இரண்டு புரமோ வீடியோக்கள் வந்த நிலையில் தற்போது மூன்றாவது புரமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் கட்டிலில் படுத்துக் கொண்டே கமல்ஹாசன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது யாரோ கிசுகிசுவென பேசும் சத்தம் கேட்கிறது. உடனே அவர் ’யார் அது’ என்று கேட்டபோது பதில் வரவில்லை. மீண்டும் அதே குரல் கேட்டதை அடுத்து மீண்டும் பதில் வரவில்லை.

இதனை அடுத்து இந்த வீட்டில் இனிமேல் கிசுகிசு பேச முடியாது என்று கமல் கூறும்போது அவருக்கே வார்னிங் கொடுக்கும் அளவுக்கு ஒரு குரல் கேட்கிறது. யாருமே கேட்கவில்லை என நினைத்து கிசுகிசு பேசினாலும் ஊரே கேட்கும் என்று கமலஹாசன் கூறுவதுடன் இந்த புரமோ வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ பிக் பாஸ் ரசிகர்களை பெரிய அளவில் எதிர் பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.