close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இந்த இருவரா? 

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்களின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கடந்த வாரம் அக்சரா மற்றும் வருண் ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர் என்ற நிலையில் இந்த வாரமும் இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர் என்று பிக்பாஸ் அறிவித்திருந்த நிலையில் இந்த வாரம் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் சஞ்சீவ் எலுமினேட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த வாரம் இன்னொரு எலுமினேஷாக நிரூப் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த வாரம் சஞ்சீவ் மற்றும் நிரூப் ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டுவிட்டால் நாளையிலிருந்து பிரியங்கா, ராஜூ, தாமரை, பாவனி, அமீர் மற்றும் சிபி ஆகிய 6 பேர்கள் மட்டுமே போட்டியில் இருப்பார்கள் என்பதும் இவர்களில் அமீர் உள்பட நால்வர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.