ஸ்வீட் பண்ண சொன்ன ஃபைட் பண்றாங்க, இதுதான் ரியல் முகமா? கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 34வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரத்தில் பல மோதல்கள், சண்டை சச்சரவுகள், அழுகைகள், காமெடிகள் என அனைத்தும் நடந்தன என்பது தெரிந்ததே.

குறிப்பாக ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மற்றும் அடை தேனடை’ ஆகிய இரண்டு குழுவினரும் உள்ளே இருந்து வரும் பொருட்களை எடுப்பதற்காக மோதியது மிகவும் ஆவேசமாக இருந்தது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் முன்னிலையில் இந்த வாரம் நடந்த டாஸ்கின் பஞ்சாயத்துக்கள் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சற்று முன் கமல்ஹாசன் தோன்றும் புரமோ வீடியோவில் ’ஸ்வீட் பண்ண சொன்னா, பைட் பண்ணிக்கிட்டு இருக்காங்க! என்றைக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் குறின்னு ஆகிருச்சோ, அன்னைக்கே பதுக்கலும் சுரண்டலும் ஆரம்பித்துவிடும். நாடு மாதிரியே வீட்டிலேயும் அது ஆரம்பித்து விட்டது.

இப்பொழுது இவங்க காட்டுற முகம் தான் இவர்களது உண்மையான முகமா? அல்லது புதிதாக போட்டிருக்கும் முகமூடியா? பார்ப்போம் என்று கமல் கூறுவதுடன் இன்றைய புரமோ முடிகிறது. இந்த புரமோவில் இருந்து இன்றைய நிகழ்ச்சி காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நயன்தாராவை போலவே செலவே இல்லாமல் திருமணம் செய்யும் ஹன்சிகா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் மிக அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக நடந்தது என்பது தெரிந்ததே.

மகேஸ்வரியுடன் விக்ரமன் நடனம்.. இதுதான் அந்த தண்டனையா பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது போட்டியாளர்கள் சீரியஸான சண்டை போட்டுக் கொண்டாலும் சில காமெடி மட்டும் ரொமான்ஸ் காட்சிகளும்

2023ல் அதிசயம் நடக்கப்போகுது: ஜான் கொகைன் மனைவியின் மகிழ்ச்சியான பதிவு!

பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஜான் கொகைன் என்பதும் இவர் தற்போது அஜித் நடித்து வரும் 'துணிவு' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்

என் காதலி ஒரு தேவதைங்க.. குயின்ஸியிடம் காதல் கதையை கூறிய விக்ரமன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் தனது காதல் கதையை சக போட்டியாளர் குயின்ஸியிடம் பகிர்ந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார எலிமினேஷன் இவர்தான்.. இனி என்ன நடக்கும் பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர் என்பதும் அவர்களில் 3 போட்டியாளர்கள் டேஞ்ஜர் ஜோனில் இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.