பிக்பாஸ் தமிழ் சீசன் 7.. படப்பிடிப்பு தொடக்கம்.. போட்டியாளர்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில் இன்று இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் கமல்ஹாசன் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து தகவல் ஏற்கனவே கசிந்தாலும் தற்போது இறுதிக்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான சரத், பாவனா, மாகாபா, உமா ரியாஸ் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் குடும்ப நண்பர் அனன்யா ராவ் என்பவர் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் என்று கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்ட அமீரின் குடும்ப நண்பர் ஐஷு என்பவர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ’சத்யா’ ‘ஆபீஸ்’ உள்ளிட்ட சீரியலில் நடித்த விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த கண்ணன், இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த தீபிகா ஆகியோர்களும் இந்த சீசன் போட்டியாளர்கள் என தெரிகிறது.

எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்களும் ஒரு போட்டியாளர் என்று கூறப்படுகிறது. மேலும் ’லவ் டுடே’ படத்தின் நாயகியான இவானாவின் தங்கை அக்ஷயா உதயகுமார் இந்த சீசனில் ஒரு போட்டியாளர் என்று கூறப்படுகிறது

பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியானாலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் இன்னும் சில மணி நேரத்தில் போட்டியாளர்கள் யார் யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சசிகுமார் அடுத்த படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்: மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிகர் சசிக்குமார் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில வாரங்களுக்கு

சென்சார் அதிகாரிகள் ஊழல் விவகாரம்.. நன்றி கூறிய நடிகர் விஷால்..!

சென்சார் அதிகாரிகள் ஊழல் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

முதல் படத்திலேயே இவ்வளவு பிரமாண்டமா? ஜேசன் சஞ்சய் வேற லெவல் திட்டம்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

பாலிவுட் செல்லும் லோகேஷ் கனகராஜ்.. ஒரே படத்தில் 3 பிரபல ஹீரோக்கள்..!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிசியான இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தை இயக்கி

மீண்டும் இணையும் 'மாமன்னன்' கூட்டணி.. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மாஸ் தயாரிப்பு..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் நடித்த உதயநிதி, வடிவேலு மற்றும் பகத்பாசில் ஆகிய மூவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது என்பதை