பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்.. .ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிடைத்த உறுதியான தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,January 13 2024]

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளைய நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும். இறுதி போட்டியாளர்களாக அர்ச்சனா, மணி, தினேஷ், மாயா மற்றும் விஷ்ணு ஆகியோர் இருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் என்று கூறப்பட்டது. நேற்று இரவு டைட்டில் வின்னர் யார் என்பதை முடிவு செய்யும் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் தற்போது டைட்டில் வின்னருக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நமக்கு கிடைத்த உறுதி செய்யப்பட்ட தகவலின்படி பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அர்ச்சனாவுக்கு சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் கிடைத்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த தகவலையும் சேர்த்து பார்க்கும் போது அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் வின்னர் பட்டம் பெறும் முதல் போட்டியாளர் அர்ச்சனா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சனாவுக்கு பார்வையாளர்களின் ஆதரவு இருந்து வந்தது என்பது குறிப்பாக பிரதீப் வெளியேற்றத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்கள் காரணமாக இருந்த நிலையில் அர்ச்சனா மட்டும்தான் பிரதீப் வெளியேற்றத்திற்கு எதிராக இருந்தார் என்பதும் அப்போது முதல் அவர் மீது பார்வையாளர்களுக்கு ஒரு ஈர்ப்பு வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்பதை பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களுமே உணர்ந்து உள்ள நிலையில் தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

இயக்குனராகும் ஒளிப்பதிவாளர் ஜீவா மகள்.. 'PS1' நடிகர் தான் நாயகன்.. நாயகி யார் தெரியுமா?

மறைந்த ஒளிப்பதிவாளர் மகள் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும் அவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த நடிகர் நாயகன்

விஜய்யின் 'கோட்' படத்தில் இணைந்துள்ளாரா இந்த பிரபல ஹீரோ? இன்ஸ்டா பதிவால் பரபரப்பு..!

 தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்து

'குட்நைட்' மணிகண்டனின் 'லவ்வர்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மணிகண்டன் நடித்த 'குட்நைட்' என்ற சின்ன பட்ஜெட் படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் ரசிகர்கள்

கமல்-மாயா குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட விஜய் டிவி பிரபலங்கள்..!

கமல் மற்றும் மாயாவை இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் காமெடி செய்த விஜய் டிவி பிரபலங்கள் இருவரும் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளனர்.  

'டாடா' இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார்? ஆச்சரிய தகவல்..!

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடித்த 'டாடா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்தது.  இதுவரை வெளியான கவின் படங்களில் 'டாடா' படம்