இது முடிவு அல்ல, இது வெறும் ஆரம்பம் தான்.. பிக்பாஸ் ரன்னர் சௌந்தர்யாவின் நெகிழ்ச்சி பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் நிறைவு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் மக்களின் வாக்குகளால் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இதனை அடுத்து இரண்டாவது இடம் அதாவது ரன்னர் இடத்தை சௌந்தர்யா பெற்றார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், டைட்டில் வின்னர் முத்துக்குமார் நேற்று நன்றி தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட நிலையில், ரன்னர் சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.
நீங்கள் அளித்த வாக்குகள் எனக்கு ஊக்கத்தையும் என்னை கடினமான நாட்களில் கடந்து செல்ல வைத்தது, நீங்கள் அனைவரும் எனக்கு துணையாக நின்றதற்கு நன்றி. என்னை முழுமையாக காப்பாற்றி இருக்கிறீர்கள், உங்களில் பலர் நான் வெற்றி பெறுவதை காண விரும்புவதை அறிந்ததும் எனக்கு நன்றி சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தது என்னுடைய சாதனை என்றாலும், இந்த வெற்றி நம் அனைவருக்கும் ஆனது. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த பயணத்திற்கு எனக்கு ஆதரவாக இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி. இது முடிவல்ல, வெறும் ஆரம்பம் தான். நீங்கள் அனைவரும் என் பக்கத்தில் இருந்தால் என்னால் உலகையே எதிர்கொள்ள முடியும். உங்கள் அனைவரையும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கின்றேன்’ என்று சௌந்தர்யா பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com