தாமரைக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி: மகனை அடுத்து கணவரும் விசிட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களில் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் பல திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்ற நிலையில் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான தாமரையின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி தந்த ஒரு நிகழ்ச்சியாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட வருடமாக மகனைப் பிரிந்து இருந்ததாக கண்ணீர் விட்டு அழுத தாமரையுடன் அவருடைய மகனை பிக்பாஸ் சேர்த்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோவை முதல் புரமோவில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள அடுத்த புரமோவில் தாமரையின் கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் காட்சிகள் உள்ளன. அவரை பார்த்ததும் தாமரை துள்ளி குதித்து கணவரை கட்டிப்பிடித்து வரவேற்றார்.

’தயவுசெய்து கோபப்படாதே’ என்றும் ’நீ நன்றாக விளையாடுகிறாய்’ என்றும் தாமரைக்கு அவரது கணவர் அறிவுரை கூறினார். மேலும் ‘பயப்படாமல் உள்ளே போய் விளையாடு’ என்று நான் தான் அனுப்பிவைத்தேன். ஆனால் இப்போது நானே உள்ளே வரும்போது எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது என்றும் கூறினார். மேலும் இந்த புரமோவின் முடிவில் தாமரைக்கு அவரது கணவர் பூ வைத்துவிட்ட காட்சி செம ரொமான்ஸ் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகர்!

இந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் அரசு வழங்கி வரும் நிலையில் முதல் முறையாக அந்த விசாவை தமிழ் நடிகர் ஒருவர் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

'குக் வித் கோமாளி' ஷிவாங்கி பாடிய பாடலை ரிலீஸ் செய்யும் இசைப்புயல்!

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஷிவாங்கி பாடிய பாடலை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித் மகளாக நடித்த சிறுமியா இவர்? உச்சகட்ட கிளாமர் புகைப்படங்கள் வைரல்!

அஜித் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமி ஒருவர் தற்போது இளம் பெண்ணாக மாறி உச்சகட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

10 தேசிய விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் காலமானார்: கமல்ஹாசன் இரங்கல்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கியவரும், பத்து முறை தேசிய விருது வாங்கியவருமான

நல்லவேளை, எனக்கு அன்பான குடும்பம் இருந்ததால் தப்பித்தேன்: எவிக்சனுக்கு பிறகு அபினய் பதிவு!

நல்லவேளை எனக்கு அன்பான குடும்பம் இருந்ததால் நான் தப்பித்தேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபினய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.