அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் வில்லனா?

  • IndiaGlitz, [Wednesday,September 20 2023]

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் பெற்ற நடிகர், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அஜீத் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருப்பதாகவும் நாயகியாக த்ரிஷா மற்றும் ஹுமா குரேஷி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமின்றி இந்த படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கிய முந்தைய படமான ‘கலக தலைவன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை மீனா இதுவரை நடிக்காத கேரக்டர்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

 நடிகை மீனா இதுவரை நடிக்காத கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

செப்டம்பர் 28 ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகிய திரைப்படம்.. என்ன காரணம்?

செப்டம்பர் 28ஆம் தேதி ஐந்து திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமுத்திரக்கனியுடன் நடிக்கும் பாரதிராஜா.. டைட்டில்-பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

பாரதிராஜா நடிப்பில், மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'மார்கழி திங்கள்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் தற்போது பாரதிராஜா நடிக்க இருக்கும் இன்னொரு திரைப்படம் குறித்த

நயன்தாரா நடிப்பில் உருவாகும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'.. பூஜை வீடியோ வைரல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக  வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்பு திறனாலும் , வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா,

கிளாஸ்ரூம்ல எதுக்குடா ஜாதி கொண்டு வர்றீங்க.. 'சீரன்' டிரைலர்..!

ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால், ஆஜித் உள்ளிட்டோர் நடித்த 'சீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது.