close
Choose your channels

விக்ரமன் கொடுத்த டாஸ்க்கை செய்து காட்டிய அசீம்.. வைரல் வீடியோ

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் விக்ரமன் கொடுக்கும் டாஸ்க்கை அசீம் அசத்தலாக செய்து காட்டிய காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 60 ஆவது நாளாக நடக்க இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் தற்போது விறுவிறுப்பாக தங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் பல்வேறு வேடங்கள் அணிந்து போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய முதல் புரோமோ வெளியாகி உள்ளது.

அதில் இந்த வாரத்தின் இறுதியில் நடக்கவிருக்கும் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளில் சிறந்த கலைஞர்கள் 5 பேரை தேர்வு செய்ய வேண்டும். அந்த ஐந்து பேர் மட்டுமே நடக்க இருக்கும் பிரமாண்ட கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது. இதனையடுத்து அந்த ஐந்து பேரை தேர்வு செய்யும் டாஸ்க் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் அசீமுக்கு விக்ரமன் ஒரு டாஸ்க் கொடுக்கின்றார். அதில் ஒரு சீரியஸான கேசில் மிஸ் செய்தீர்கள் என்றால் அவருக்கு தூக்கு தண்டனை. அப்போது அங்கு லாஃபிங் கேஸ் ஓபன் பண்ணி இருக்கிறார்கள். நீங்கள் எப்படி வாதாடுவீர்கள் என கேட்க அதற்கு மிகச் சிறப்பாக அசீம் சிரித்தவாறு வாதாடும் காட்சியை நடித்து காட்டுகிறார். அவரது நடிப்புக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அசீமுக்கு அவ்வப்போது கண்டனங்கள் குவிந்தாலும், அவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமான போட்டியாளராகத்தான் இன்னும் வலம் வருகிறார் என்பதும் அவர் கண்டிப்பாக 100 நாள் வரை இறுதிவரை செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டைட்டில் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் விக்ரமனுக்கு ஒரு சவாலான போட்டியாக இருப்பவர்களில் ஒருவர் அசீம் என்று கூறப்பட்டு வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.