முதல் வாரத்திலேயே வெளியேறிய கவர்ச்சிப்புயல் நடிகை .. சிகரெட் ஊதிய ஷகிலா.. என்ன நடக்குது பிக்பாஸ் தெலுங்கில்?

  • IndiaGlitz, [Wednesday,September 13 2023]

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில் பல நாட்கள் நீடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவர்ச்சி புயல் நடிகை முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி நடிகை ஷகிலா சிகரெட் பிடிக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் அதில் கவர்ச்சி நடிகை கிரண், கவர்ச்சி நடிகை ஷகிலா ஆகியோர்களும் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் எலிமினேஷன் நடந்த நிலையில் அதில் குறைந்த வாக்குகள் பெற்ற கவர்ச்சி நடிகை கிரண் வெளியேற்றப்பட்டார். இது மிகப்பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடிகை கிரண் இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதிவரை தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் வாரமே வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் கிரண் மற்றும் ஷகிலா இருவரும் நெருங்கிய தோழிகளாக பிக்பாஸ் வீட்டில் பழகிய நிலையில் கிரண் வெளியேறிய சோகத்தில் ஷகிலா சிகரெட் ஊதி தள்ளும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது பலருக்கும் பல்வேறு விதமான அறிவுரைகள் சொல்லும் ஷகிலா, குழந்தைகள் உள்பட பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சிகரெட் புகைக்கலாமா என்ற கேள்வியையும் தற்போது நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

ஸ்டார்ட் பண்ண இதுதான் சரியான நேரம்.. நயனின் மறைமுக மெசேஜ் என்னவாக இருக்கும்?

நடிகை நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விரைவில் ஒரு  புதிய அறிவிப்பை வெளியிட போவதாக

3 தமிழ்ப்படங்கள், ஒரு அஜித் ரீமேக் படம்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

இந்த வாரம் ஓடிடியில் மூன்று தமிழ் படங்கள் மற்றும் அஜித்தின் 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக் படமான 'போலோ சங்கர்' ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

பெண்களுக்காக 20 திரையரங்குகளில் சிறப்பு காட்சி: பிரபல நடிகை அறிவிப்பு..!.

நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த  'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' என்ற  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ள நிலையில் இந்த  படம் பெண்களுக்காக சுமார் 20 திரையரங்குகளில் சிறப்பு காட்சி

பூக்கள் தான் பந்து, குச்சி தான் பேட்.. கிரிக்கெட் விளையாடும் மாளவிகா மோகனன் வீடியோ..!

நடிகை மாளவிகா மோகனன் ஒரே ஒரு குச்சியை வைத்து கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ]

தனிமையில் ஆபாச படம் பார்த்தால் குற்றம் அல்ல: கேரள உயர் நீதிமன்றம் கருத்து..!

தனிமையில் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.