98 நாட்கள் இருந்த தாமரையின் சம்பளம் இவ்வளவுதானா? 

பிக்பாஸ் வீட்டில் தாமரை 98 நாட்கள் இருந்த நிலையில், அவர் இருந்த நாட்களுக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும், கடந்த வாரம் ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில் அவர்களில் தாமரை எப்படியாவது இறுதிப்போட்டிக்கு சென்று விடுவார்கள் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் அனைவரும் கணிப்பையும் மீறி தாமரை கடந்த ஞாயிறன்று வெளியேற்றப்பட்டார். இதனால் பிக்பாஸ் பார்வையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்பது மட்டுமின்றி கமல்ஹாசனே தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரைக்கு, வாரம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் அவர் வீட்டிலிருந்த 14 வாரங்களுக்கு மொத்தம் ஒன்பது லட்சத்து 80 ஆயிரம் சம்பளம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் 12 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு அவர் சென்றிருந்தால் அந்த பணத்தை விட அவருக்கு கிடைத்திருக்கும் சம்பளம் குறைவு என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆனால் தாமரை அந்த 12 லட்ச ரூபாய் பணம் வேண்டாம், என்னால் அதை விட அதிகமாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் சொன்னதன் காரணமாகத்தான் அவர் மீது கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் மரியாதை ஏற்பட்டது என்பதும், இந்த மரியாதை மற்றும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக அவர் பல கோடிகள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

இதுக்கு பேரு ஜல்லிக்கட்டா? பேசாம நிறுத்திடுங்க: பிரபல நடிகர் பேட்டி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் அவற்றில் ஒரு கட்டுப்பாடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட

எனது நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை: மன்னிப்பு கேட்ட சித்தார்த்

தான் கூறிய நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றும் அதனால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் நடிகர் சித்தார்த் சாய்னா நேவாலுக்கு எழுதியுள்ள மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்முறையாக 'நெகட்டிவ்' வார்த்தை கேட்டு சந்தோஷம் அடைகிறேன்: த்ரிஷா டுவிட்

முதல் முறையாக நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு சந்தோஷம் அடைகிறேன் என நடிகை த்ரிஷா  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கோடி கணக்கில் விலை… ஆனாலும் விற்பனையில் சக்கைபோடு போடும் சொகுசு கார்!

கொரோனா நேரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் 117 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக விற்பனையில்

மனித முகமே எனக்கு வேண்டாம்… விரக்தியில் இளைஞர் செய்த காரியம்!

ஜெர்மனியில் மனித முகத்தோற்றத்தையே விரும்பாத இளைஞர்