close
Choose your channels

அப்பாவாகிறார் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்: ரசிகர்கள் வாழ்த்து!

Saturday, September 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அப்பாவாக போகிறார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தொடங்கியது என்பதும் அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ்வுக்கும் ஓவியாவுக்கும் இடையே காதல் என்று கூறப்பட்ட போதிலும் ஆரவ், உண்மையில் நடிகை ராஹி என்பவரை தான் காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ராஹி, கெளதம் மேனன் இயக்கி வரும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்த நிலையில் தற்போது ராஹி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ஆரவ் அப்பாவாக போகிறார் என்ற செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆரவ் தற்போது ’ராஜபீமா’ மற்றும் ‘மீண்டும் வா அருகில் வா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.