கமலுக்கு மெசேஜ் அனுப்பிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!

  • IndiaGlitz, [Wednesday,January 20 2021]

105 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரி மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு சம்பளம் மற்றும் பரிசு தொகை சேர்த்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் கிடைத்தது என்பதும் அதைவிட அவர் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரிக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தற்போது ஆரி தனது சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, ஆரிக்கு டைட்டில் கோப்பையை கொடுத்த கமலஹாசன் அவர்களுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும், தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஆரி கூறியதாவது: அன்பார்ந்த கமல்ஹாசன் அவர்களுக்கு,’ உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைந்து நீங்கள் மேலும் பல உயரங்களும் சாதனைகளையும் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். கமல்ஹாசனுக்கு ஆரி அனுப்பிய இந்த மெசேஜ் தற்போது வைரலாகி வருகிறது

More News

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: விடுதலையாக ஒருவாரம் இருக்கும் நிலையில் பரபரப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்தார்

ரூ.2 லட்சத்தில் லம்போஹினியா? அசத்தல் சாதனை புரிந்த கேரள இளைஞர்!

மங்களூருவில் உள்ள ஒரு தனியார் தொழில் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த 25 வயது இளைஞர் அனாஸ் பேபி.

விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பம்பர் Prize.. துள்ளிக் குதிக்கும் தமிழர்!

தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை இன்றும் கொடிகட்டிப் பறந்து வருகிறது.

மக்களால் நேரடியாக முதல்வர் ஆனேன்… எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

சிஎஸ்கேவில் இருந்து விலகும் முன்னணி கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி டிவிட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்(40) தற்போது அணியில் இருந்து விலகுவதாக டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.