close
Choose your channels

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

Monday, May 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மற்றும் டைட்டில் வின்னர்கள் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவது புதிது அல்ல. ஏற்கனவே பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான ஆரி, ஆரவ் ஆகியோர்களும் ஹரிஷ் கல்யாண் உட்பட சில போட்டியாளர்கள் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அசீம் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினி முருகன்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் தான் அசீம் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் லொகேஷன் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரபல நிறுவனம் ஒன்று இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொன்ராம் படம் என்றாலே கிராமத்து கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்பதால் அவருடைய இந்த படமும் கிராம த்தில் நடக்கும் ஒரு முக்கிய சம்பவத்தின் அடிப்படையில் உள்ளது என்பது கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அசீம், தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்க உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.