close
Choose your channels

விவாகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Saturday, June 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல நட்சத்திர தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து ரசிகர்கள் எதிர்பாராதது என்பது தெரிந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற பிரபல நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் கன்னடம் ஐந்தாவது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் டைட்டில் வின்னராக பட்டம் பெற்றவர் நடிகர் சந்தன். இவர் தனது மனைவி நிவேதிதா என்பவரை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 ஆண்டுகளில் இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மையுடன் கன்னட சினிமாவில் வலம் வந்த சந்தன், பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை நிவேதிதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் அவர் ’இந்த நாள் நானும் சந்தனும் நல்ல புரிதலோடு ஒருமனதாக விவாகரத்து பெற முடிவு எடுத்து உள்ளோம். நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்து நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்’ நாங்கள் இருவரும் சட்ட ரீதியாக பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையுடன் இருப்போம்’ என தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment