close
Choose your channels

பெண் இயக்குனரின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறாரா பிக்பாஸ் முகின்?

Friday, August 28, 2020 • தமிழ் Comments

பிரபல பாடகரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் டைட்டில் வின்னருமான முகின்ராவ் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறித்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் முதல் திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

முகின்ராவ் ஹீரோவாக அறிமுகமாகும் தமிழ் படத்தை அஞ்சனா அலிகான் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யா மேனன் நடித்த ’வெப்பம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனா அலிகான் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் முகின் ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற முகின்ராவ் தமிழ் படத்தில் அறிமுகமாக உள்ளது அவரது ஆர்மியினர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz