இயக்குனர் நெல்சனை சந்தித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ! வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் டைட்டில் வின்னரான ராஜூ சமீபத்தில் இயக்குனர் நெல்சனை சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜூவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு மற்றும் டைட்டில் வின்னருக்கான கோப்பை வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. பிக் பாஸ் டைட்டில் வின்னர் கோப்பையை ஏற்கனவே தனது குரு கே.பாக்யராஜ் அவர்களிடம் தந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராஜு, தற்போது அதே கோப்பையை இயக்குனர் நெல்சனிடம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் கோப்பையை கையில் வாங்கி மகிழ்ச்சியுடன் பார்க்கும் நெல்சன், ராஜூவுக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஏற்கனவே ராஜூ மற்றும் நெல்சன் நல்ல நண்பர்கள் என்ற நிலையில், பிக் பாஸ் வின்னர் ராஜுவுக்கு நெல்சன் தனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

More News

சி.எஸ் அமுதன் - விஜய் ஆண்டனி படத்தில் த்ரில் டைட்டில் அறிவிப்பு!

'தமிழ்ப்படம்' மற்றும் 'தமிழ்ப்படம் 2' உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ் அமுதன்இயக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் த்ரில் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐதராபாத்தில் ஒரே ஓட்டலில் தங்கினார்களா தனுஷ்-ஐஸ்வர்யா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தங்களுடைய பணிகளின் காரணமாக ஐதராபாத் சென்று இருக்கும் நிலையில் இருவருமே ஒரே ஓட்டலில் தங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாலிவுட் தரத்தில் இருக்கும்: சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து எடிட்டர்!

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும் இதை நான் மிகைப்படுத்திக் கூறவில்லை என்றும் படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும் என்றும் பிரபல எடிட்டர் ஒருவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சூப்பர்ஹிட் பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் பிக்பாஸ் ஐக்கி பெர்ரி!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான ஐக்கி பெர்ரி,  சூப்பர் ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஹைதராபாத் போலீஸாக மாறிய த்ரிஷா: வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா திடீரென ஹைதராபாத் போலீஸாக மாறி இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.