முதல் நாளிலே ஆட்டம், பாட்டம், முத்தம், ரத்தம் ரணகளத்துடன் தொடங்கும் பிக்பாஸ்

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒரு வாரம் கழித்தே சூடு பிடிக்கும். ஆரம்பத்தில் நண்பர்களாக இருக்கும் போட்டியாளர்கள் ஒருவாரம் கழித்தே குரூப்பாக பிரிவது, கருத்துவேறுபாடு கொள்வது, சண்டை போடுவது, நட்பில் உருகுவது என நட்பும், ரணகளமும் மாறி மாறி இருக்கும்.

இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சியின் அறிமுக நாளாக இருந்த நிலையில் இன்று முதல் நாள் வழக்கமான நாள் தொடங்குகிறது. இன்று காலை வெளிவந்த புரமோ வீடியோவில் போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் காலை பொழுதை ஆரம்பிக்கின்றனர். குறிப்பாக மோகன் வைத்யாவும் சாண்டியும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல் உள்ள காட்சி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சேரன், மோகன் வைத்யா, பாத்திமா பாபு தவிர மீதி 12 போட்டியாளர்களும் இளைஞர்கள் என்பதால் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சியை மிஞ்சும் அளவுக்கு சாக்சி போடும் ஆட்டம், அபிராமியின் முத்தம் என ஜாலியாக செல்லும் புரமோ வீடியோ, கடைசியில் தண்ணீர் இல்லாத நீச்சல் தொட்டியில் ஆட்டம் போடும் சாண்டி திடீரென விழுந்ததால் ரத்தத்துடன் மயக்கமுற்று இருப்பது போன்ற காட்சியுடன் முடிகிறது. சாண்டிக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் சிகிச்சைக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா? என்பதை நிகழ்ச்சியை முழுவதும் பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

முதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி! யாருக்கு தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி ஓவியம் அகற்றமா? பிரேம்ஜியின் மாஸ் பதில்!

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருசில பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பிக்பாஸ் வீட்டை சுற்றிப்பார்த்த பத்திரிகையாளர்கள்,

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:

விஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தனது வீட்டில் தன்னுடைய சிறுவயது அனுபவங்களுடன் தொடங்கி வைத்தார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் சேவைக்கு பழம்பெரும் அரசியல்வாதி வாழ்த்து!

சென்னையில் கடந்த சில நாட்களாக தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் குறை கூறாமல், போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு இடைஞ்சல் செய்யாமல்,

ரஜினியின் தபால் வாக்கு குறித்து கமல் கருத்து!

தபால் வாக்கு படிவம் சரியான நேரத்தில் கிடைக்காததால் மும்பையில் இருக்கும் நடிகர் ரஜினி, தனது வாக்கை பதிவு செய்ய முடியவில்லை என்று தனது டுவிட்டர் மூலம் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.