மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ்: சுரேஷ் தாத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று ஃபினாலே நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது என்பது தெரிந்ததே. இதில் ஆரி டைட்டில் வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் இவர்கள் இருவருக்கும் மட்டுமின்றி இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் இறுதி நாள் வரை தினமும் மூன்று புரமோ வீடியோக்களை வெளியிட்டு விஜய் டிவி அசத்தி வந்தது. இந்த புரோமோ வீடியோக்களே அந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டியது என்பதும் கிட்டத்தட்ட அன்றைய நாள் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை இந்த புரமோவில் இருந்து தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் டிவியின் இன்னொரு சேனலான விஜய் மியூசிக் சேனலை பிரபலப்படுத்தும் நோக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்சீன் காட்சிகள் தினமும் மதியம் 2.30 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுவரை பல சுவாரசியமான காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் அவை எல்லாம் இந்த புரமோவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சுரேஷ் தாத்தா, சனம்ஷெட்டியின் பல சுவாரஸ்யமான காட்சிகள் இந்த புரமோவில் இருக்கும் என்று கூறப்படுவதால் சுரேஷ் தாத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது