close
Choose your channels

'எவன் வந்தாலும் சரி, நான் பாத்துக்கிறேன்' பிக்பாஸ் வருணின் 'ஜோஸ்வா இமைபோல் காக்க' டிரைலர்

Saturday, December 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான வருண் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய ’ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருண் கலந்துகொள்ளும் முன்னரே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வருண் பிரபலமடைந்ததால் இந்த படம் முக்கியத்துவம் தருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது என்பதும் இந்த படம் கௌதம் மேனனின் ஸ்டைலில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது என்பது இந்த டிரைலரின் மூலம் தெரிய வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வருண் நடிப்பு மற்றும் ஆக்சனை பார்க்கும்போது இவர் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வர அதிக வாய்ப்பு உள்ளது என்பது தெரியவருகிறது.

பிக்பாஸ் வருண், கிருஷ்ணா, ராஹி உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் இசை அமைத்துள்ளார். கதிர் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி வருணுக்கு ஒரு பக்கம் திருப்பு முனை என்றால் இந்த படம் இன்னொரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.